பிரதான் மந்திரி சூர்யா கார் முஃட் பிஜ்லி யோஜனா கணக்கெடுப்பு-CSC VLE - கள் நல்ல வருவாயை பெறலாம்

பிரதான் மந்திரி சூர்யா கார் முஃட் பிஜ்லி யோஜனா கணக்கெடுப்பு-CSC VLE - கள் நல்ல வருவாயை பெறலாம்

PM announces Surya Ghar Muft Bijli Yojana - Nambirajan


திட்டத்தின் நோக்கம்

இந்த திட்டம்ரூ. 75,000 கோடியில், 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தை மாதாந்திர அடிப்படையில் வழங்குவதன் மூலம் 1 கோடி வீடுகளுக்கு ஒளியூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நுகர்வோருக்கு கிடைக்கும் நன்மைகள்

1) மாதாந்திர அடிப்படையில் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது

2) மின் கட்டணம் குறைப்பு

3 சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன்மூலமும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலமும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதன் மூலமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிக்கிறது.

4) மின்சாரத்திற்கான வெளிப்புற ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது மற்றும் வீட்டு மட்டத்தில் ஆற்றல் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

5) சூரிய சக்தி பயன்படுத்துதலை ஊக்குவித்தல் மற்றும் கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துதல்.


பின்வரும் நிபந்தனைகளின் கீழ் வீடுகளில் சோலார் பேனல் நிறுவுவதற்கு அரசு மானிய ஆதரவை வழங்குகிறது.

(i) ரூ.30,000/- kW to 2kW வரை

(ii) ரூ.18,000/- 3kW வரை கூடுதல் திறன்

(iii) மொத்த மானியம் ரூ. 78,000/- சிஸ்டம் 3kw  விட பெரியது.

வீடுகளுக்கு ஏற்ற கூரை சூரிய ஆலை திறன்

சராசரி மாதாந்திர மின் நுகர்வு (அலகுகள்)

பொருத்தமான கூரை சூரிய ஆலை திறன்

மானிய ஆதரவு

0-150

1-2kW

Rs.30,000 to Rs.60,000-

150-300

2-3 Kw

Rs.60,000 to Rs.78,000/-

>300

Above 3kW

Rs.78,000/-


வீடுகளில் சோலார் பேனல் நிறுவும் செயல்முறை

1)    ஆர்வமுள்ள நுகர்வோர் தனது மொபைல் எண்ணைப் பற்றிய சரியான விவரங்கள், ஒருமுறை கடவுச்சொல்மின்சார நுகர்வோர் பெயர் & பில் எண்சோலார் பேனல் நிறுவலுக்கான இடம் உள்ள விவரங்களை உங்கள் வீட்டில் சர்வே எடுக்கும் CSCVLE -க்கு வழங்கவேண்டும்.

 

2)    அனைத்து விவரங்களும் சரியாக இருப்பின் மாநில மினசாரத்துறை தங்களை தொடர்புகொண்டு, இடத்தை ஆய்வு செய்து தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஒப்புதலை தங்களுக்கு வழங்கும்.

 

 

3)    மாநில மின்சார துறை ஒப்புதலை வழங்கிய பின்னர், நுகர்வோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சோலார் பேனல் நிறுவனதுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சோலார் பேனல் வீட்டில் நிறுவி அதனை புகைப்படம் எடுத்து அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து மின்சாரத்துறைக்கு மீட்டர் வேண்டி விண்ணப்பித்தல் வேண்டும்அரசால் அங்கீகரிக்கப்பட்ட சோலார் பேனல் நிறுவனங்களை அறிய கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில்         சரிபார்த்துக்கொள்ளவும்.

 https://pmsuryaghar.gov.in/VendorList/statewiseVendor

 

4)    ஆன்லைன் கமிஷன் சான்றிதழை உருவாக்கநெட் மீட்டரை அங்கீகரித்து நிறுவ உங்கள் வீட்டை மின்சார துறை ஆய்வு செய்யும்.

 

5)    கமிசன் சான்றிதழை பெற்ற பிறகு நுகர்வோர் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை பதிவேற்றம் செய்து மானியக் கோரிக்கையை ஆன்லைனில் உருவாக்க வேண்டும்.

 

6)    அனைத்து விவரங்களும் சரியானவை என கண்டறியப்பட்டால், 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் மானியத் தொகையை நேரடியாக மத்திய அரசு செலுத்திவிடும்.


CSC VLES-க்கான மொபைல் அப்ளிகேஷன் படிகளில் தகுதியான குடும்பங்களில் கணக்கெடுப்பு  சேகரிப்பு
 

1)      CSC VLEகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

https://play.google.com/store/apps/details?id=com.pmsuryaghar

 

2)      வெற்றிகரமான நிறுவலுக்குப் பிறகு VLEகள் திரையில் தோன்றிய தொடக்க விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

3)      பிறகுதிரையில் தோன்றும் CSC VLE விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4)      CSC VLE உள்நுழைவின் கீழ் VLE ஆனது CSC ஐடியை பயனர்பெயராகவும் மொபைல் எண்ணை கடவுச்சொல்லாகவும் உள்ளிட வேண்டும்மேலும் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு மேலும் தொடர திரையில் தோன்றும் கேப்ட்சா தொகையை உளீட்டு கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ளவும்.

CSC VLE நன்மைகள்

1)       வெற்றிகரமான சமர்ப்பிப்பு கணக்கெடுப்புக்குப் பிறகுஒவ்வொரு சர்வேயின் தரச் சரிபார்ப்பை அரசாங்கம் சரிபார்த்துஒவ்வொரு கணக்கெடுப்பிற்கும் கமிஷன் தொகையான ரூ.24/-(அனைத்து வரியையும் சேர்த்துவெளியிட ஒப்புதல் அளிக்கும்.

 

2)       நிராகரிக்கப்பட்ட கணக்கெடுப்பின் எண்ணிக்கைக்கான பணம் VLE-களுக்குச் செலுத்தப்படமாட்டது.