PMJAY - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை

 PMJAY - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை

PMJAY - Nambirajan


அரசின்  இலவச குடும்ப மருத்துவ காப்பீட்டுத்திட்டம். 

காப்பீட்டுத்தொகை : ரூ.5 லட்சம்


1. ரூ. 5 லட்சம் காப்பீடு அட்டை பெறுவதற்கு, குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாய் eKYC (சுய விபரம்) பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கு நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து CSC பொது சேவை மையம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனரா என்றும் CSC பொது சேவை மையங்களிலே தெரிந்து கொள்ளலாம்.


இத்திட்டத்திற்கு கண்டறியப்பட்டுள்ள குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட சுகாதார அட்டை வழங்கப்படும்.

 2.இந்தியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து  தனியார் மருத்துவமனைகளிலும் 5 லட்சம் வரை பட்டியலிடப்பட்ட நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

தகுதிகள்-

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள PHAAY,PHH குடும்ப அட்டைதாரர்களை இத்திட்டத்தில் அரசு பயனாளிகளாக இணைத்துள்ளது.


தேவையான ஆவணங்கள்-

1ஆதார் கார்டு,
2. ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு)
3.ஆதாரில் இணைத்துள்ள மொபைல் எண்.

0 Comments